அது ஒரு சுகம்
உன் பார்வை பட்டு விழுந்த போது
உன் பாசம் தொட்டு எழுந்த போது
உன் நிழல் விம்பம் என்னைத்தொட்டதும்
அது ஒரு சுகம்
நெஞ்சுக்குள்ள உன்னை இருத்தி
நேசம் பாசம் கொட்டிப்பரப்பி
உன் உசிரை எனக்குள்
தைச்சு வைச்ச அது ஒரு சுகம்.
விடியாத பொழுதோரம்
முடிக்காத உன் கனவோடு
இறந்தாலும் அது ஒரு சுகம்.