தலையெழுத்து Mano Red

கெட்டது கெட்டபின்
கேடு கெட்டு வாழ்ந்து
என்ன பயன்...??
எவனுக்கோ பயந்து
தன்னை மறப்பது ஏன்..??

நிதம் பணம் தேடி
நித்திரை இழந்து விட்டு,
நீங்காத பாவங்களுடன்
நிகழ்கால நிழலாய்
நீடுழி வாழ்ந்து என்ன பயன்..??

விதியை நம்பி
மதியை இழந்தவர்களே
அனுபவம் தொலைக்கும்
அமானுட பிறவிகள்,
அமாவாசையில் கூட
நிலா தேடும் கிறுக்கர்கள்..!!

தலையெழுத்தையும்
தலை விதியையும்
தாறுமாறாக நம்பி
தன்மானம் இழப்பதற்கு
தற்கொலை செய்யலாம்..!!

தலை நரைத்து
புலன் சிதைந்த பின்
பதுங்க இடம் தேடும்
பகடை மனம் இது,
உருப்படியாய் நிற்க விடாமல்
உருட்டிக் கொண்டே இருக்கும்..!!

தலையெழுத்து என்ன
தலையையா எடுத்து விடும்..??
விதி என்று சொல்லி
வீணாய் போவதற்கு
விலங்காக இருப்பது மேல்..!!

எழுதியவர் : மனோ ரெட் (22-May-14, 8:28 am)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 39

மேலே