விழுதுகள் இல்லை என்கிறது விதி

ஆசையாய் கணவன்
அன்பாய் மனைவி
இருந்தும் அவர்களை வாரிசு வரம் மட்டும் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது ........

நெடுங்காலமான இல்லற பயணத்தில்
ஏமாற்றத்தைதான் தந்திருக்கிறான் இறைவன்
இருந்தும் நம்பிக்கையில் நகர்வதற்கு
தயங்கவில்லை இவர்களின் நாளைய கனவு .......

நாளை நாளை என்றே
நகர்ந்துவிட்டது பாதிநாள் வாழ்க்கை
இருந்தும் ஏக்கத்திற்குத்தான்
இறைவனின் இரக்கத்தை காணோம் .......

ஏறி இறங்காத கோவிலில்லை
செய்து பார்க்காத வைத்தியமில்லை
இருந்தும் காலத்தின் தீர்ப்பில்
இவர்களுக்கு தோல்விதான் மிச்சம் .........

பரிகாரங்கள் கூட
பரிகாசம் செய்கின்ற அளவிற்கு
இளைக்கரம் ஆகிவிட்டது
அவர்களின் வாழ்க்கை ......

எவ்வளவோ பேருக்கு
இலவசமாய் கிடைத்த வரம்
இவர்களுக்கு இலட்சங்களை
இறைத்தும் கிட்டவில்லை ........

எது எதற்கோ
பயித்திமாய் திரியும்
மனித உலகத்தில்
இவர்களும் பயித்தியமாகிவிட்டார்கள் குழந்தைக்கு

போகும்போதும் வரும்போதும்
நலம்விசாரிப்பாதாய் தொடங்கி
நல்லவற்றை விட்டுவிட்டு பிள்ளைநினைப்பை
பெரிதுபடுத்தி காயபடுத்த தயங்காத சொந்தங்கள் ..

ஆசிர்வதிக்ககூட அருகதையற்றவர்களாக்கி
வேதனையில் வேல்பாய்ச்சி
கூனிக்குறுக வைக்காமல்
நகரவில்லை ஒவ்வொரு இல்ல நிகழ்ச்சியும் ..

வாழவந்தவளை வரட்டுமரமென்று
வார்த்தையாலே வஞ்சித்து
கருணையே இல்லாத
கல்லாகிவிட்டார்கள் உறவுக்காரர்கள் ........

எந்த ஒரு பிடிமானமும் இல்லாமலேயே
கடமைக்காக காலம் தள்ளி
கதறிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் .......

மரத்தை தாங்கும் விழுதைப்போல
இறுதியில் இவர்களைதாங்கதான்
வாரிசுகளே இல்லாமல்
வற்றிப்போய் விட்டது இவர்களின் இல்லம் .....

நிழல்தரும் மரம்போல
இறுதிகாலத்தில் இளைப்பாற
எந்த இடத்தினை
இறைவன் ஒதுக்கி இருக்கிறானோ ?

எழுதியவர் : வினாயகமுருகன் (29-May-14, 5:45 pm)
பார்வை : 69

மேலே