தந்தை
தாய் என்னை ஐயிரண்டு மாதம் கருவில் சுமந்தால் என்றால்
நீயோ என்னை உந்தன் நெஞ்சில் சுமந்தாய்!
நான் தடுமாறித் தவறிக் கீழே விழும் பொழுதெல்லாம்
கைக்கொடுக்கும் கையாய் இருந்தாய்!
நான் தோல்வியால் துவழும் பொழுதெல்லாம் தோள்கொடுக்கும் தோழனாய் நின்றாய்!
நான் என் வாழ்க்கைப்பாதையில் வழித்தவறிப் போகும்பொழுதெல்லாம் நல்வழிகாட்டும் ஆசானாய் இருந்தாய்!
எத்தனைஎத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் உன் மகளாகவே பிறக்க வரம் கேட்கிறேன் தந்தையே!