இனி அச்சமில்லை

(மாத்திரை யளந்து ... நித்திரை மறந்து ... சித்திரம் வடித்தேன் ... நினக்கே சமர்ப்பணம், பாரதி ... நின்னையே சரணடைந்தேன் ... 'இனி அச்சமில்லை!')

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

லட்சியத்தின் பாதை தன்னில் இடறு வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

சூட்சமத்தின் சூனியத்தில் சூழ்ந்துகொண்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

முயற்சி செய்த வினைகள் யாவும் வீழ்ச்சி நோக்கி போகினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

மாட்சி கெட்ட மானுடத்தை உற்று நோக்கு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

எச்சமாக எண்ணி நம்மை எறிந்து விட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

இறைச்சியாக பெண்ணை யெண்ணி இழிந்து பேசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

வளர்ச்சி காட்டும் வழியெலாம் வழுக்கலாகி போயினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

வீழ்ச்சியால் வெதும்பிடா, நன் மலர்ச்சி உண்டா கிடும்

இனி,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

எழுதியவர் : வைரன் (1-Jun-14, 11:53 am)
Tanglish : ini achchamilai
பார்வை : 1647

மேலே