மெல்லிய சிறு மூச்சே போதும்
வார்த்தை வரிசை
பேச்சுக்களோ
விழிப்பார்வை நேரெதிர்
வீச்சுக்களோ
வேண்டியதில்லை,வெள்ளி நிலவே
நின் கொள்ளை எழில் மனதை
அள்ளி அள்ளி பருகுதற்கு .
நீ மெல்ல மெல்ல வெளிவிடும்
மெல்லிய சிறு மூச்சே போதும்
நின் எழில் மனதை முழுமையாய்
முழுமனதாய் கொண்டவனுக்கு !!