உலக சுற்று சூழல் தினம்

இயற்கையை அழித்து
இயற்கை எய்திடாதே மனிதா!!
எரிக்கும் குப்பையில்
இயற்கை மாயுது மறந்திடாதே!!

வரும்போது எதுவும் நீ எடுத்து வரவில்லை
கொடுத்தது எல்லாம் இயற்கை தானடா
அதை கெடுத்து கொள்ளாதே மாமனிதா
உருவாக்க முடியா செல்வம் இயற்கை!!

உருவாக்கா விட்டாலும்
உறக்கத்தில் தள்ளாதே
உயிர்கொல்லியாகாதே!!

அடுத்த தலைமுறை வாழ நீ நினைத்தால்
இந்த தலைமுறையில் மரத்தை
உருவாக்கிட உறுதி கொள!்

மாசற்ற மனிதனாய் நீ வாழ
மாசை குறைத்து நல் சுவாசம்
பெற்றிட வேண்டாமோ!

பணம் பத்தும் செய்யும்
பசிக்கு உணவாய் பணம் செல்லுமா
இயற்கையை படைத்தவன் இறைவன்
அதை அழித்திடல் கண்டு
அமைதி கொள்வானா!

ஆறாம் அறிவே
ஆணவம் கொள்ளாதே
ஆண்டவன் நினைத்தால்
அரைநொடி போதும!்

வாழப்பிறந்தவனே
ஆளுமை பற்றி அறியாதவனா நீ
அழிக்கும் உரிமை ஆக்கியவனுக்குண்டு
அனுபவிப்பனுக்கில்லை !

அதனாலே ஆண்டு தோறும்
நினைவூட்டுகிறோம்
நிறைவேற்றிட உறுதிகொள்
இன்றே...

உலக சுற்றுச் சூழல் தினம்
நாளைய சந்ததி வளம்பெற
சுத்தத்தை பேணி காப்போம்
சொல்வது என்னுரிமை
பேணிக்காப்பதே அனைவர்க்கும் நன்மை!!

எழுதியவர் : கனகரத்தினம் (5-Jun-14, 2:54 pm)
பார்வை : 5415

மேலே