புரிந்துகொள் தந்தையை

பல் முளைக்கா வயதினிலே
பக்கத்து வீட்டு பையனை
தள்ளிவிட்ட மகனிடம்
சபாஷ்டா செல்லம்!
சொல்லனுமா தந்தை??!!!

பாட்டி கீழே விழ வேண்டி
பாதையிலே பழத்தோலை
போடுகின்ற மகனிடம்
சபாஷ்டா செல்லம்!
சொல்லனுமா தந்தை??!!!

பேனாவோ பென்சிலோ
திருடுகின்ற மகனிடம்
கிடைத்தவரை லாபம்
சபாஷ்டா செல்லம்!
சொல்லனுமா தந்தை??!!!

படிப்பிலே கவனமில்லை
படம்பார்க்க கவனமுண்டு
இருக்கட்டும் பரவாயில்லை
சபாஷ்டா செல்லம்!
சொல்லனுமா தந்தை??!!!

சீப்பும் தலையுமாய்
சிகரட்டும் கையுமாய்
சுற்றுகின்ற மகனிடம்
இளவயசில் இப்படித்தான்!
சபாஷ்டா செல்லம்!
சொல்லனுமா தந்தை??!!!

களவாடும் திறமையிலே
இளம்பெண்ணை காதலித்து
தள்ளாடும் மகனிடம்
சபாஷ்டா செல்லம்!
சொல்லனுமா தந்தை??!!!

வேலை செய்ய தோணவில்லை
கஞ்சிக்கும் வழியில்லை
காதல் மணம்முடித்து
கூட்டி வந்த மகனிடம்
சபாஷ்டா செல்லம்!
சொல்லனுமா தந்தை??!!!

வாலிபத்தில் முறுக்குண்டு
வாழ்க்கையிலே பொறுமையில்லை
மனம் வெறுத்து மணமுறித்து
மதுகுடிக்கும் மகனிடம்
சபாஷ்டா செல்லம்!
சொல்லனுமா தந்தை??!!!

சொல்லனுமா தந்தை?!
பெற்ற மகனை உயிரோடு
கொல்லணுமா தந்தை?!

எதை நோக்கி எதிர்பார்த்து
வாழுகிறீர் வாலிபரே!
ஒழுக்கமாய் வாழவும்
செழிப்பாகி சிறக்கவும்!

தெளிவோடு வாழவும்
திறம்பட செயல்படவும்
மணம் புரிந்த மங்கையினை
கடைசி வரை காதலித்து

சமுதாயத்தில் நல்லவனாய்
சரித்திரத்தின் நாயகனாய்
வெற்றிசூடும் மன்னவனாய்
புத்திகூர்மை உள்ளவனாய்
சத்தியத்தின் முத்திரையாய்

என்மகனைப் போலிங்கே
யாருண்டு என்றுசொல்லி
மார்தட்ட வேண்டியே

திட்டுவதும் குற்றமா?
திருத்துவதும் குற்றமா?
பதில் சொல்லு வாலிபனே !!!

எழுதியவர் : உமர் ஷெரிப் (8-Jun-14, 2:47 pm)
பார்வை : 505

மேலே