எழுதுகிறேன் இயன்றவரையில்

எழுதுகிறேன் இயன்றவரையில்
ஏதோ பிறந்தோம் ஏதோ மறைந்தோம்
என்று காலத்தை கணக்கிட்டு காலம்கழிக்காமல்
என்னால் முயன்றவரையில் எழுதுகிறேன் .....

மனித ஜடமாய் மறைந்துவிடமால்
மண்ணோடு மண்ணாய் கரைந்துவிடாமல்
காலாத்தால் நான் கரைந்துவிடாமல்
கவியின் துணையால் வாழுவேன் நான் .........

இதயத்தை சுத்தமாக்கி
எண்ணங்களை உயர்வாய்மாற்றி
அறிவினை ஆயுதமாக்கி
அற்ப்புதமாய் கவிபடைக்கிறேன் ........

நான்பட்ட துன்பம் கூடே
பிறர் படும் துன்பம் சேர்த்து
அனுபவத்தை வரிகளாய் மாற்றி
அறிவுரை கவி படைக்கிறேன் நான் .......

வீட்டுக்கும் சேதி சொல்லி
நாட்டுக்கும் சேதி சொல்லி
விளக்கமாய் புதுமை கவியில்
விளக்கினேன் வாழ்வை நான் ........

கவிதை என்னும் அஸ்த்திரம் கொண்டு
காணுகின்ற துன்பம் பலதை
அழகான வார்த்தை கோர்த்து
அனுபவ கவிதை தந்தேன் ......

என்னோடு மறைந்துவிடாமல்
எதிகால சந்ததியினருக்கு
எத்தனையோ செய்திகளை
எழுதினேன் கவிதையாய் நான் ........

எக்கால மனிதர் எவர்க்கும்
என்றுமே பொருந்தும் வரிகள்
தப்பாமல் எந்தன் கவியில்
தழைத்திடும் கருத்து நிழலாய் .....

எழுதுகிறேன் இயன்றவரையில்
ஏதோ பிறந்தோம் ஏதோ மறைந்தோம்
என்று காலத்தை கணக்கிட்டு காலம்கழிக்காமல்
என்னால் முயன்றவரையில் எழுதுகிறேன் .....

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Jun-14, 7:16 pm)
பார்வை : 47

மேலே