நவ நாகரீகம்

கொட்டும் மலை அருவி -தமிழ்
கொஞ்சும் மழலை மொழி ...

பசுமை கொஞ்சும் வயல் வெளி -புல்
மேயும் பசுமாடு..

பாட்டி சொல்லும் கதைகள் -பக்கத்துக்கு
வீட்டு நண்பன் ..

வயிறு முட்ட நிலாசோறு-உறங்க வைக்கும்
தாலாட்டு ...

மனதை தலாட்டும் இயற்க்கை காற்று -மலர்
பூத்துக்கிடக்கும் வீட்டு தோட்டம் ...

கட்டியணைக்கும் தோழனின் பாசம் -ஒட்டி
உறவாடும் உறவுகளின் நேசம் ...

ஆற்று நீர் குளியலும் -அங்கே
மீன் பிடிக்கும் சுகமும் ..

மண்பானை சோறும் மனம் கிளப்பும்
பாட்டியின் குழம்பும் ...

இவற்றையெல்லாம் இழந்தாலும் இன்னும் திருந்தவில்லை
நவநாகரீகம் என்னும் சீர்கேடு ..

எழுதியவர் : நிஷா (9-Jun-14, 6:20 pm)
Tanglish : nava naagareegam
பார்வை : 132

மேலே