எங்கே தொடங்குவது
![](https://eluthu.com/images/loading.gif)
எங்கே தொடங்குவது
நம் காதலின் முடிவை...
இன்னதென்று புரியா தருணத்தில்
புதைந்த எண்ணங்களுக்கு,,,
ஒருநாள்
உயிர் கொடுத்து
உணர்வுகளையும் கொடுத்தாய்....
என் தனிமையை
என் இதயத்தை
என் காயங்களை என
என்னையே களவாடிச் சென்றாய்
களவுபோவதை உணர்ந்தும்
ரசித்தேன் வேறேதும் செய்யாமல்...
உன்னுள் தொலைந்தேன்
உன்னையே எண்ணி
உருகும் மெழுகானேன்
என் வாழ்நாளின்
ஒவ்வொரு நொடியையும்
உன்னுடன்
உன் கைகளுக்குள்
கழிக்க எண்ணினேன்...
ஆனால் இன்றோ...
உன்னை வெறுக்க
காரணம்தேடி அலைகிறேன்
மிஞ்சியது ஏமாற்றமே...
உன்னை வெறுக்க
காரணம்தேடி அலையும்
என் சுயகௌரவம்
காரணங்களை கண்டுபிடித்தாலும்
உன்னிடம் காதலை
மட்டுமே கொடுக்க நினைக்கும்
மனது வெறுப்பை எல்லாம்
என்மீதே ஊற்றி செல்கிறது...
உதடுகள் உன்னை
வெறுக்கவேண்டி புலம்பினாலும்...
ஆழ்மனம் மட்டும் என்னை
தோற்க்கும்படி மன்றாடுகிறது...
எந்த நோடியில்
உன்னை காதலித்தேன் என்று
ஆராய்ந்து அறிவதற்க்கு முன்...
எந்த நொடியிலாவது
உன்னை மறக்கமுடியுமா என்று
ஏங்க வைத்து விட்டாயே...