வறுமையின் வாசலில் நின்று

வறுமையின் சாரல்
என் வீட்டில்
அடைமழையாய் பெய்கிறதே

கடன் எனும் வெள்ளத்தில்
மூழ்கி
என் தாயும் தகப்பனும்
காலமானார்கள்

நான் மட்டும்
ஏதோ
நம்பிக்கை எனும் நீச்சல் ஆடை
அணிந்து கொண்டதால்
தப்பித்துவிட்டேன்....

................................................................
சில வலியின் வழியில்
ஏனோக்

எழுதியவர் : ஏனோக் நெகும் (11-Jun-14, 4:48 pm)
பார்வை : 114

மேலே