பிரிவு

குறையின்றி எனக்குள் நிறைவாக நிறைந்தாய்
பிறை நிலவாகாமல் பௌர்ணமியாக வாழ்ந்தாய்
பிறர் சுட்டெரிக்கும் போதிலும்
நிலவாய் குளிர்ந்து நிம்மதி தந்தாய்

இன்று நீ விட்டு செல்வதால்
வெற்றாய் போகும் என் வானம்.
வெற்றாய் கிடந்தாலும் வேறு நிலவை தேடாது.
நட்பின் நாட்களே நட்சத்திர நினைவுகளாகும்.

துளியாய் விழுந்து
வெள்ளமென ஓடினாய்
விதையாய் புதைந்து
விருட்சகமாய் வளர்ந்தாய்

பிரிவின் விளிம்பிலிருந்து
நான் திரும்பி பார்த்த தூரம் வரை
உன்னோடு பயணித்த நாட்கள்
பசுமையான நினைவுகள்.

நட்பின் இருக்கதாலான
பிரிவென்னும் வலி
அழியாத தழும்புகளாய்
ஆயுள் வரை நீடிக்கும்

பிறப்பே பிரிவின் தொடக்கம்
சேரும் உறவுகளும் பிரியத்தான்
உயிர் கூட பிரியும் உடலை விட்டு ஒரு நாள்
அந்த ஒரு நாளின் ஒத்திகை தான் இந்நாள்

இந்த கவிதை
என் கற்பனையின் உச்சமல்ல
என் கண்ணீரின் மிச்சம்

எழுதியவர் : பாலபிரசாத் (17-Jun-14, 10:10 pm)
சேர்த்தது : Bala Prasath
Tanglish : pirivu
பார்வை : 171

மேலே