அவள் தான் அம்மா

உயிர் கொடுத்து

உருவம் கொடுத்து

ஊணும் கொடுத்து

தன் உடம்பில்
இடமும் கொடுத்து

பூமித்தாய் கேட்டதினால்
தத்தும் கொடுத்து

உனக்கு உணவாக
தாய்பாலும் கொடுத்து

அழுகின்ற பொழுதெல்லாம்
தாலாட்டுப் பாடல் கொடுத்து

சிரிக்கின்ற பொழுது
திருஷ்டிப் பொட்டும் கொடுத்து

படிப்படியாக வளரும் பொழுது
ஆனந்தத்தைக் கொடுத்து

பருவம் அடையும் பொழுது
அரவணைப்பையும் கொடுத்து

மனம் தடுமாறும் பொழுது
ஆதரவும் கொடுத்து

திருமண பந்தத்தில்
உன்னை விட்டும் கொடுத்து

தாம்பத்திய வாழ்க்கையில்
குறுக்கிடாமல் உன் மகிழ்ச்சியை
உனக்கே கொடுத்து

இவ்வளவும் கொடுத்தவள்

தன் வயோதிகத்தில்
உன்னிடம் வந்து எதையும்
கொடு என்று ஒருபோதும்
கேட்டதில்லை.

அவள் தான் "அம்மா"

எழுதியவர் : விநாயகபாரதி.மு (18-Jun-14, 10:18 pm)
Tanglish : aval thaan amma
பார்வை : 273

மேலே