தாயே தாயானவளே

தாயே....!!!
*************
கருவறையில்
சுமந்து கல்லறைவரை
சுமப்பவளே என் தாயே ....!!!
கருவறையில் நான் சுகமாக ..
உன்னை கவசமாக பாவித்தேன் ...
நீ பட்ட துன்பத்தை யான் அறியேன் ...!!!

ஈன்ற பொழுதில் நீ பட்ட
துயரத்துக்காக நான் பிறந்த
நேரத்தில் உனக்காக அழுதேனோ
தெரியவில்லை .....
அதைகூட அழுகையாக எடுக்காமல்
என் கீதமாக கேட்டு ஓரக்கண்ணால்
கண்ணீர் சிந்தியவளே -என் தாயே ...!!!

என்னால் தாயானவளே
***********************************
என்னை தாய் சுமந்தபோது
பத்து தினங்கள் பட்ட துயரை
பக்கத்தில் இருந்து உணர்த்தியவளே...
என் உயிரே என்னால் தாயானவளே ...!!!

தினமும் வாந்தி ...
தினமும் தலை சுற்று ...
அத்தனை துன்பத்தையும்
என் தாய்க்கு நீயும் கொடுத்தவன்
என்று உணர்த்தி என் தாயின்
தியாகத்தை எனக்கு உயிராக்கிய
என் உயிரே தாயானவளே ....!!!

ஒவ்வோரு
ஆண்ணின் வாழ்க்கையிலும்
தாயும் தாயானவளும் கண்கள்
ஒரு கண் இழந்தால் எப்படி
முகம் அழகில்லையோ
அதேபோல் இதில் ஒன்றை
இழந்தவன் வாழ்க்கையும்
அழகில்லை ...!!!

எழுதியவர் : கே இனியவன் (19-Jun-14, 4:39 pm)
பார்வை : 107

மேலே