விடைதரு விழா

நிறைவு விழாவில்

கவிதை என்றால்
பொய் என்பார்கள்
உண்மை தான் ஒத்துக்கொள்கிறேன்-ஆனால்

அதையும் தாண்டி
என் உள்ளத்தில் பட்டதை
உண்மைத்தன்மையோடு உணர்த்துகின்றேன்
செவிசாய்த்து கேளுங்கள்!!!

ஒரு மனிதனுக்கு அத்தியாவசமானது
உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க இருப்பிடம் என்பார்கள்

இவையெல்லாம்
என் வீட்டில் கிடைத்ததை விட
என் நண்பர்களிடத்தில் கிடைத்ததுதான் அதிகம்

மாற்றம் ஒன்றே மாறாதது
மற்றவையெல்லாம்
மாறக்௯டியது என்பார்கள்
பாவம் அவர்களுக்க எப்படித்தெரியும்
என் நண்பர்களைப்பற்றி!!!

ஓயாமல் பேசினாரலும்
ஓய்வெடுத்து பேசினாலும்
ரீங்காரமிடும் வண்டைப்போல
எப்போதும் ஒன்றாகவே சுற்றிக்கொன்டிருப்போம்

எங்களுக்குள் சாதி மதத்தால்
வேறுபட்டிருப்பினும் மனதால்
ஒற்றுமையாய் இருந்தோம்

வீட்டை விட்டு
விடுதியில இருந்தாலும்
சோகமில்லா சோலையாகவே இருந்தோம்!!!!

விடுதியில சாப்பிட்டு வந்ததும்
ஏதோ ஒன்றை பேச ஆரம்பிப்போம்
இடையிடையே சில நகைச்சுவை கலந்த
சண்டைகளும் ௯ட நடக்கும்
முடிக்கும் நேரத்தில
மணியை பார்த்தால் அது
மறு நாளை தாண்டி துடித்துக்கொண்டிருக்கும்
என்ன செய்வது
எங்களை அறியாமலயே
மணிகள் எல்லாம் நிமிடங்களாய் மாறிவிட்டன!!!

சரி நாளை வகுப்புக்கு
செல்ல வேண்டும் என்று
அவசர அவசரமாக படுக்கைக்கு செல்வோம்
மறுநாள் காலை
விடிய விடிய 10 மணிக்கு
வாத்தியார் அட்டனன்ஸ் எடுக்கும்போது
வாசல் படியில் வரிசையாய் நிற்போம்

இதே போல
நாலறு மாசமா
போனதே தெரியாம போனது

அடே நண்பா?
சோகம் கண்ணீரு
இவையெல்லாம் சும்மாதானு
நெனச்சிட்டு இருந்தன்
இந்த தருணம்
என்னை அறியாமலயே
என் கண்ணிலும்
கண்ணீர் பூக்கள் பூக்கின்றன

இந்த பாழ போன மனச
யான் தான்
இறைவன் படைச்சானோ
நீச்சல் தெரியா
குழந்தைப் போல என் மனம்
தண்ணீரில தத்தளித்து
தவிக்குதடா!!!!

பல பசங்க எங்கல பாத்து
இவங்க மோசமான ௯ட்டமுனு
மனசில நெனச்சதுன்டு
உருப்படாத ௯ட்டமுன்னும்
தேராத ௯ட்டமுன்னும் எண்ணற்ற பேச்சிகள்
என் காதில் கேட்டதுண்டு
நான் மட்டும் நினைத்துக்கொள்வேன்
இது என்ன புதுசா!!!!

இந்த பொண்ணுங்க
அண்ணா அண்ணானு
ஆசையோடு கேட்கும் வார்த்த
இனி எத்தனை நாளுன்னு
எண்ணி எண்ணி ஏங்கியதுண்டு
கட்சி ௯ட்டமுன்னு
கலகலப்பா இருந்த
நம்ப ௯ட்டம் இப்போ
காணம போவுதுண்னு
கலங்கி நிற்கிதடா!!!

உடம்புல காயமுன்னா
முருந்து வச்சி ஆத்திடலாம்-இங்க
மனசில காயமடா எத வச்சி ஆத்திறது.....
இப்படிக்கு
என்றும் உங்கள்
சு.அப்பாசாமி

எழுதியவர் : (20-Jun-14, 8:21 am)
சேர்த்தது : அப்பாசாமி S
பார்வை : 135

மேலே