எழுத்து

கடற்கரை மணலில் வீசும் காற்றுக்கும்
தெரியும்
காற்றோடு கூத்தடிக்கும் கடலலைக்கும்
தெரியும்
வானில் குந்தி இருக்கும் வட்ட நிலவுக்கும்
தெரியும்
வரைந்த ஓவியத்தின் வரையா கற்பனைக்கும்
தெரியும்
விளைந்த பொன்னிலத்தில் விரிந்து கிடக்கும் விளைச்சலுக்கும் தெரியும்
மறைந்து கிடக்கும் மகத்துவ மனிதனுக்கும்
தெரியும் - என்றும்
மறையாத சரித்திரமாக போகும்
எழுத்தின் வரலாறு - இது தாங்கும்
விழுதின் கவியாறு...................

எழுதியவர் : காயத்ரி (20-Jun-14, 10:44 pm)
Tanglish : eluthu
பார்வை : 134

மேலே