தாழம்பூ
அன்பிற் கில்லையென வள்ளுவன் வாயுரைத்ததுவும்
மண்ணில் உயிர்வாழ உறுதுணை செய்வதுவும்
பெண்ணின் தலைமயிரில் தூக்கிட்டு கொண்டதுவும்
என்னென்று கேட்டாலது தாழம்பூவே
-ஆனந்தன்
ஒவ்வொரு சீருக்கும் ஒவ்வொன்றை அர்த்தம் கொண்டு படிக்கவும்
விளக்கம்
தாழம்பூ-தாழ் +அம்+பூ
தாழ்-தாழ்ப்பாள்
அம்-தண்ணீர்
பூ-மலர்
அன்பிற் கில்லையென வள்ளுவன் வாயுரைத்ததுவும்-தாழ்ப்பாள்
மண்ணில் உயிர்வாழ உறுதுணை செய்வதுவும் -தண்ணீர்
பெண்ணின் தலைமயிரில் தூக்கிட்டு கொண்டதுவும்-மலர்
நன்றி