சிரமத்துக்கு மன்னித்து விடுங்கள்

பகல் 12 மணி சூரிய பகவானின் சுட்டெரிக்கும் வெம்மையில் வேண்டிய பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து கொண்டு வங்கி குளிர்காற்றில் இருந்து விடைபெற்று என் வண்டியில் சாவி சொருகி உதைத்து பயணத்தை தொடங்க ஆயத்தம் ஆகும் வேலையில் ....
வெயிலின் வியர்வை துளியை விருந்தாய் பெற்ற முதியவரின் முதிர்ந்த குரலில்
ஏன்பா. என்ன கொஞ்சம் அங்க இறக்கி விட்டற்ரையா என்று தூரத்தில் இருக்கும் ஒரு பல் சரக்கு கடையை காட்டிய வாறு என் அருகில் வந்தார் .
தீர்க்கமான கண்கள் வெள்ளை சூடிய உருவம் பேச்சில் பாசம் வெம்மையின் சோதனை வியர்வையின் தாக்கம் வயதின் முதிர்ச்சி என் மொத்தத்தில் பெற்ற பிள்ளையால் கவனிக்க படாதவர் என் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது .அதை சற்றும் காட்டிகொள்ளாதவர் ்இந்த பட்ட பகலில் கூட அதை எளிதாக மறைக்கும் தாயுமானவர் ..
வருங்கள் என்று வண்டியை திடமாக பிடித்து கொண்டு ஏறுவதற்கு வார்பாக நின்றேன்
அவர் சற்று சிரமத்துக்கு உண்டானர் காரணம் என் வண்டியின் வடிவமைப்பு . சற்றே என் மனதுக்குள் வருத்தம் தான் சிரமம் குடத்ததுக்கு
வண்டியில் ஏறிகொண்டு ...
என்னிடம் கூறினார் சிரமத்திற்க்கு மன்னித்து விடுங்கள் என்று ...

எழுதியவர் : கிருஷ்ணா (24-Jun-14, 4:10 pm)
பார்வை : 142

மேலே