தொடுதலில் இல்லையடி என் உயிர் காதல் 555

பிரியமானவளே...

தொடுதல் மட்டும் காதல்
என்றால்...

ஒருநொடி போதுமடி
உன்னை நான் தொட...

தொடுதலில் இல்லையடி
என் உயிர் காதல்...

என்னில் உன்னை சுமப்பதே
என் காதலடி...

உண்மை காதலை
உணர்வாயா...

அசையாத
மலர்செடியும்...

அலை இல்லாத கடல்
கரையும்...

ஓடாமல் நிற்கும்
நதிகளும்...

பூக்காத பூ செடிகளும்
இருந்தால்...

அன்று நானும்
இருப்பேன்டி...

என்னில் உன்னை
நினைக்காமல்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-Jun-14, 8:33 pm)
பார்வை : 207

மேலே