வலி நல்லது

தட்டும் உளியின்
தாக்குதலை எதிர்கொண்டால்,
கருங்கல்லும் பெறும் பேறு!
கொட்டும் குளவியின் (?!)
காதலை நேசித்தால்,
சிறு புழுவும் பெறும் சிறகு!!
திட்டும் அன்னையின்
தவிப்பினை நீயுணர்ந்தால்,
திகட்டாமல் இனிப்பாய் இனித்திடும் எதிர்காலம்!
வலி, நல்லது தான்...
கறை நல்லதெனும் "SURF EXCEL" விளம்பரம் போல..
*************************************************
-சுந்தரேசன் புருஷோத்தமன்