இந்த அன்பிற்கு என்ன பெயர்
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னுடன் பேச விருப்பமின்றி விலகிச் சென்றேன்
யாரோ இவன் என்று
ஆனால் மனம் உன்னை விலக மறுத்தது
என்னுடையவன் இவன் என்று
ஓயாமல் பேசும் உன் இதழ்கள் சிறிது நேரம்
ஓயாத என்று நினைப்பேன்
ஆனால் உன் இதழ்கள் மௌனமாய் இருந்தபோது
என்னுடன் பேசமாடாய என்று தவித்தேன்
நீ என்னுடன் இருந்தாலும் என்றாவது ஒருநாள்
நாம் பிரிந்துவிடுவோம் என்று நினைப்பேன்
நீ ஒருநாள் பிரிந்ததும்,மீண்டும் என் வாழ்கையில்
வந்துவிடு என்று நினைத்தேன்
செல்ல பெயரிட்டு உரிமையோடு நீ அழைக்கையில்
கோபம் கொள்ளும் மனது
நீ வேறு பெண்களை பற்றி பேசையில்
நீ எனக்கு மட்டுமே உரியவன் என்று கூற நினைத்தேன்
உன்னை திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணமில்லை
என்று உன்னிடம் கூறினேன்
பெற்றோர் திருமணதிற்கு சம்மதம என்றபோது
உன்னை பற்றி ஏன் கூறினேன்
உனக்கும் எனக்கும் நட்பு மட்டுமே
என்று கூறிகொள்கிறேன்
ஆனால் கனவிலும்,கற்பனையிலும்
கணவனாக நீயே தோன்றுகிறாய்
நாளும் முயற்சிக்கிறேன் உன் கண்ணில்
படாமல் விலகிசெல்ல
மிக ஆலமான ஒரு நெருக்கத்தை உணர்கிறேன்
உன் கண்களை காணும்போது.
உன்னுடன் வாழ மறுக்கும் என் மனது
வேறுஒருவனை ஏற்றுகொள்ள மறுகிறது
உன்னை ஏற்கவும் முடியாமல்
விட்டு விலகவும் முடியாமல்
நித்தம் நித்தம் சாகிறேன் அன்பே!