அலைபாயும் மனமே உன்னை தேடும் நிதமே

கண்களில் பற்றிய தீயில்
நெஞ்சை உடைகிறதே
இது என்ன கலவரமா ?

உடைந்த இடமதிலே
உன் பெயரை வரைகிறதே
இது காதல் நிலவரமா?

சிதைந்த மனம் சிலை
போலே எழுகிறதே ...

சிறு பிள்ளை போலே
உன்னை தேடி அழுகிறதே ...

வானில் நிலவாய்
உன் முகமோ தெரிகிறதே ...

மறைக்க முடியாமல்
கடலாய் மனம் அலைகிறதே ...

சாரலில் நனைகையிலே உன் தீண்டலை உணர்கிறதே- மனம்
மலர் தேடும் வந்தாய் உன் பின்னே அலைகிறதே ...

உன் புன்னகையை ரசிக்கையிலே
உலகம் மறந்து கிடக்கிறதே ...

உன்னை கண்டவுடன் என் மனமே
எனக்கெதிராய் நடக்கிறதே...
.

எழுதியவர் : நிஷா (27-Jun-14, 4:48 pm)
பார்வை : 159

மேலே