கவிஞானக் கடல் விருது
![](https://eluthu.com/images/loading.gif)
எழுத்து தளத்தின் அன்பு நண்பர்களே ,
தென்றல் சமூக நல அறக்கட்டளை சார்பாக இன்று (27.06.2014 )
சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் ,
மாண்புமிகு நீதியரசர் திரு S ஜெகதீசன் அவர்கள் கரங்களால் ,
எனக்கு " கவிஞானக் கடல் " எனும் விருது வழங்கப்பட்டது ..
இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தவர் முன்னால் மாவட்ட ஆட்சியாளர்
திரு S ஆதிமூலம் I A S ( ஓய்வு ) அவர்கள் ஆவார் .
இந்த நல்ல செய்தியினை உங்களிடம் பகிர்வதில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைகிறேன் . அந்த நிகழ்வின் புகைப்படமும் ,விருதும் இதனனுடன் இணைத்துள்ளேன் உங்கள் பார்வைக்கு.
நான் கவிதைகள் எழுதிட தூண்டிய நம் எழுத்து தளத்திற்கும் , என்னை வாழ்த்தியும், கருத்துக்களை வழங்கி ஊக்குவித்தும் உதவியவர்கள், உங்களைப் போன்ற என் நட்பு வட்டத்தின் அன்பான நண்பர்களும் மற்றும் நம் தளத்தின் ஏனைய பார்வையாளர்களும் தான் என்பதை சொல்லிகொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன் .
இதனால் எழுத்து தள நிர்வாகிகளுக்கும் , தளத்தின் அன்பு உள்ளங்களுக்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .
ஏற்கனவே தமிழக கவிஞர்கள் இலக்கிய சங்கத்தின் மூலம் சென்ற ஆண்டு
" கவி முரசு " என்கிற பட்டயமும் ,
நம் தளத்தின் மூலம் " கருத்தாய்வு மாமணி " என்கிற பட்டமும் பெற்றவன் என்பதை சொல்வதில் பெருமை அடைகிறேன் .
இவை அனைத்தையும் என்னை வளர்த்து ஆளாக்கிய மறைந்த என் தாய்க்கும் , தந்தைக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் .
மேலும் என் கவிதை பணி தொடரவும் , உங்களின் வாழ்த்தும் கருத்துக்களும் வழக்கம்போல கிடைத்திடவும் விழைகிறேன் .
என்றும் உங்கள் தமிழ் இன சகோதரன் , நண்பன்
N R பழனி குமார்
சென்னை
செல்: 9962861747 தேதி ; 27.06.2014