என்ன உலகமடா இது

உறக்கத்திற்கும்
குறைவில்லை
உணவுக்கும்
பஞ்சமில்லை
உல்லாசப்பயணம் தான்
ஒரு ரூபாய்
செலவில்லை
தாயின் கருவறையில்
இருக்கும் வரை....
வெளியில் வந்துவிட்டேன்..
என்னை கழுவுவதற்கு கூட
காசு கேட்கிறாள்
இந்த ஆயா...
என்ன உலகமடா இது...