மழலை மொழி

மழலை மொழி

பிஞ்சு வாயில்
எச்சில் ஊற
பொக்கை வாய் காட்டி
மயக்கும் மெய்சிரிப்பில்
மழலை மொழி பேசி வரும்
தங்கத் தாமரை!........

காய்ந்த பயிருக்கு
கார்மழை-உன்
தமிழ் கொஞ்சும்
பால் மொழி!..........

தேன் போல
தித்திக்கும் -உன்
வாயூறும்
மழலை மொழி!...........

குழலிசையும்
யாழிசையும்
தோற்றுப் போயின-உன்
நஞ்சில்லா நன்மொழியால்!........

பெற்றவர் உற்றவர்
மட்டுமல்ல
அனைவரும் ரசிக்கும்
சந்தோசச் சாரல்!...........

எவருக்கும்
மயக்குறும்
மந்திரம்-உன்
அழகான அமுத மொழி!........

கன்னங்கரு விழிகளால்
நெஞ்சம் குடைந்து கொண்டே
முத்துப்பல் காட்டி
முழு நிலவாய் சிரித்துக் கொண்டே
கொஞ்சு மொழி பேசி நீ
பஞ்சு நிகர் பாத மலரால்
தளிர் நடையிட்டு
தங்கத் தேராய் வரும் போது
அம்மம்மா!............................
சரண் அடைந்து நிற்குதடி
சர்வலோகம் அத்தனையும்!.....

மென் பாதம் தொட்டுத் தழுவி
விளையாட ஆசை கொள்ளும்
கடல் அலைகூட அமைதியாய்
ரசிக்குதடி உன் சிங்கார வாயழகை!........

இன்றறியா நஞ்சுமொழி
எந்நாளும் அறியாமல்
இன்பமாய் வாழ்ந்திடடி-உனை
ஈன்றோரைப் போற்றிருடி!........

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (29-Jun-14, 6:59 am)
Tanglish : mazhalai mozhi
பார்வை : 2014

மேலே