உன் விரல் பிடிக்கும் நாளுக்காக விதியுடன் போராட்டம்

சொந்தங்கள் எல்லாம் தூரமாகி போகும் நீ எனக்கு சொந்தமாகும் நாள்
அன்பை கொட்டி தீர்த்த அன்னையை பிரிந்தேன்
அன்னைக்கு அன்னையாய் வளர்த்த தந்தையை பிரிந்தேன்
என் சோகங்களை பகிர்ந்த சொந்தங்களையும் பிரிந்தேன்
நட்ப்பாய் பழகிய நாய் குட்டியையும் பிரிந்தேன்
தோழிகளையும் பிரிந்து தொலை தூரம் செல்கிறேன் உன்னுடன்
பெண்ணுடைய பிறப்பில் இது எழுதபடாத விதி என்று எண்ணிக்கொண்டேன்
இத்தனையும் இழந்து உன்னை பெற்றேன் எல்லாமாய் நீ இருக்க வேண்டுமென்பதால்
சுயநலம் கொண்ட பெண்ணின்மனம் உன்னை தவிர யாரையும் ஏற்காது
உனக்காய் மட்டும் சிந்திக்கும் திறனை எனக்குள் வளர்த்தது காதல்
உனக்காய் சிரித்தேன் உனக்காய் அழுதேன் உனக்காய் வாழ்வேன்
உனக்கு முன்னே என் உடலையும் உன் உயிரையும் பிரிவேன்

எழுதியவர் : நிஷா (29-Jun-14, 12:49 pm)
பார்வை : 113

மேலே