உணர்ந்து பார்

மதி கொண்ட மங்கைக்கு மரியாதயும் உண்டோ !
கசக்கி பிழியும் கள்வர்களை ,
கல்லறையில் அறைய , ஜென்மங்கள் வேண்டுமோ, நீதி தேவதைக்கு!
நீதிகள் நிலை நாட்ட ,
சரித்திர பக்கங்கள் திருப்புங்கள்!
அன்றொரு நீதி, இன்றொரு நீதி ,
என்றும் ஓய்விலாத அநீதி!
காந்தியை கல்லறையில் எழுப்ப வேண்டாம்,
காவி உடை அணிந்து நடிக்க வேண்டாம்,
உறையும் குருதி ஒன்று தானே,
உணர்ந்து செயல்படு உண்மை விளங்கும்!
பெண்மைக்கு நன்மை பயக்கும்!!
இப்படிக்கு நானே,
மறுமலர்ச்சி தருவேனே!!!

எழுதியவர் : ரேவதி (30-Jun-14, 7:54 pm)
Tanglish : unarndhu paar
பார்வை : 121

மேலே