விமர்சனம்
ஒன்று போதும்
ஒன்றாக இருப்பினும்
பலவாக விரியுமினும்
அதுவொன்றின்
சீண்டலின்றி
தேறுவது - தெருவில்
உருளுகின்ற குப்பையைப்
போலொரு
விதி செய்வதாய்
புழுதி வரைவதாகும்
சரியோ தவறோ
சின்னதாய்
இருப்பினும்
சிறுமணித் தேர்
உருட்டுவதாய் - பச்சிளம்
கைகளெனக்
களிநடம் புரியும்
ஓரிடத்தில்
உட்காரும் வகை
இளைப்போ களைப்போ
என்றாலும்
நிழலின்றி நிஜமின்றி
விரிவதில்லை
இதயம் துடிக்கும்
அரவணைப்பு
பொதிந்த
சுவருக்கு வண்ணமே
பிரதானமெனினும்
செதுக்கல்கள்
சிரிப்பதுவே ஈர்ப்பு
இடைவேளைக்குப் பின்
தொடர்வது
சுவாரசியமோ சுளிப்போ
ஓரத்தில்
பதிவாகும் துணுக்கு
சலசலப்பினூடே - முனகுதல்
பெரிதாவதில்லை
சிறிதாவது
கவனிக்கப்படுதல்
சாமரம் விழித்தன்
அறிகுறியென
பேனாவில்
நிறைந்த ஜீவனின்
தாகம்
தீர்க்கப்பட - புள்ளி
மான்களாய்
ஓடட்டும்
எழுத்துக்களின்
கோர்வைத் தூவல்கள் ..........!