கனவு தேவதை - நாகூர் லெத்தீப்

நிறத்தை நான்
விரும்பவில்லை
அவள் நிழலாக
நிற்கிறாள்
நிறமாக தெரிகிறாள்..........!
அவள் பார்வையால்
எதை சிந்தனை செய்தால்.......!
நானும் யோசிக்க
முற்படுகிறேன்
அவளையே சிந்திக்கிறேன்........!
மனதாலே நான்
சொல்லும்
வார்த்தை
அவளுக்கு புரியுமா
தெரியுமா.............!
இதோ நிற்கிறாளே
அவள் தான் எனது
கனவு தேவதை..........!
நான் சொல்வதை
நம்பவில்லையா
சிரிப்பாக வருகிறதா.......!
நம்பினாலும்
நம்பாவிட்டாலும்
அவளே எனது காதலி...........!
பிறகு
விழித்தெழுந்தேன்
கனவுகளை சுமந்து
உறங்கியதை
உணர்ந்தேன்..........!