புசுப்பலதாவா

அமெரிக்காவில் இருக்கும் பேரன் கிராமத்தில் இருக்கும் தனது பாட்டிக்கு செல்பேசியில் பேசுகிறான்:

பாட்டி என் பொண்டாட்டிக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. அதுக்கு அடுத்தவாரம் பேரு வைக்கலாம்னு இருக்கோம்.

அப்படியா, நல்ல செய்திப்பா மகிழ்ச்சியா இருக்கு என்ன பேரு வைக்கப் போறீங்க.

பேர நாங்க முடிவு பண்ணீட்டோ ம் புஷ்பலதா-ன்னு .

என்னது புசுப்பலதாவா?
ஆமாம் பாட்டி.

அப்படின்னா என்ன அர்த்தம்

மலர்கொடின்னு அர்த்தம் பாட்டி.
ஏண்டா பேராண்டி. வாயில நொழையாத பேரை வைக்கறக்குப் பதிலா மலர்க்கொடின்னு பேரு வச்சா என்ன கொறஞ்சா போயிடும்?
.....?

எழுதியவர் : மலர் (1-Jul-14, 8:36 pm)
பார்வை : 200

மேலே