சூட்சம பூகம்பம்

வெள்ளிவீதி,வெற்றில்லைவீட்டில்,
வாழைஇலை மேசையிலே விரிந்து,
வெள்ளாட்டின் ஊனதில் பரவி,
உள்ளதில் ஊனொன்று எடுத்து,
துள்ளலுடன் வாயருகில் கொண்டுவந்தான் !
நாலுகால் நாற்காலி நடனமாட,
கிலிகொண்ட வெற்றிலை வீட்டான்,
விலுக்கென்று வழுக்கிக் கீழேவிழ,
வலியுடன் எழுந்த அவன்,
வியப்புடன் நின்று கொண்டு,
மதில்மேல் இருந்த கண்ணாடியும் ,
வெள்ளியும் மாறிமாறி நொறுங்கிய,
காட்சி அடிவைற்றில் குழவைஇட்டது,
அச்சமுடன் வீதியடைந்த அவனோ,
சுற்றம்சூழ நின்றகோலம் கண்டு,
அவன் கூறிய கூற்று;-
"இங்கு அரங்கேரியதொரு பெருங்கோவம்!
கண்டுகொள்வேன்!
ஐயோ!அது,
பூமித்தாய் கொண்டு வந்த,
கொடுன்கோலோ இல்லை,
அவளின் மூச்சுதுளையோ,
என் கூரைச்சரியக் கண்டேன்!
தரையோடு அமிழ்தல் கண்டேன்!
பெருங்கொடுமை தந்த பூமித்தாயே,
உனது விஸ்வரூபம்,ஒன்று கண்டேன்!
பூகம்ப வடிவிலே ...................................................!!!!!!!!!!


-பா.சசிகுமார்

எழுதியவர் : (2-Jul-14, 8:18 pm)
சேர்த்தது : சசி தமிழன்
பார்வை : 82

மேலே