பருவ காதலி

தனிமை பொழுதுகள் .........
தவித்த நாட்கள் ........
தலையணை நண்பன் .......
தவிர சொந்தம் வேறில்லை ........

அருமை இரவுகள் .......
அணைக்க ஆளில்லை ........
அன்புக்கு ஏங்கினேன் .........
அவசியம் நீ வேண்டும் .......

உடல் உறங்க
உயிர் மட்டும் ஏனோ கனவில்
உன்னோடு உறவாட ...........
உச்சி முகர்ந்தே உன்விரல் தீண்டினேன் ...........

காலை வந்தது .......இரவு விழித்த
காமன் உறங்கினான் .......
காதல் நெஞ்சம் உறங்கவில்லை .....உன்
காட்சி கிடைக்கும் என்ற எண்ணத்தில்.........

கல்லூரி வந்தேன் ...........
கண் முன்னே நீ .......
கடவுள் தரிசனம்
கண்ட பக்தன் போல் நான் ......

பக்கம் வந்தேன் ......வெட்கத்தில்
பயந்து ஓடினாய் .........
பள்ளி தோழியாய் இருந்த நீ இன்று
பருவ காதலியாய்.....

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (3-Jul-14, 2:18 pm)
Tanglish : paruva kathali
பார்வை : 108

மேலே