நான் யாரென்று என்னைத்தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரியும்

யார் இவன்?
எரிகுழியி லிருந்து
எழுந்து வந்தவன் போல்
எங்கோ பார்க்கிறான்ன...?

வெங்காட்டுப்புழுதியில்
வெள்ளாமக்காரனின்
தாடியில் முளைத்த
வெளுத்த சிறுவன் போல்
யார்இவன்?

கதிரவ மீசையை,
கையால் முறுக்கும்
வீர சைனியம் தெரியவில்லையே,
இவனின் பால் முகத்தில்....
யார் இவன்?

இரண்டு அக்னி குழிகள்
அவனது கண்கள்...
ஒருவேளை
கந்தக கவிதைக்குள் குடியேறிய கவிஞனா அவன்...!!

கருவறைவீடு தீப்பற்றியதோ என்னவோ?
இவனின் நாடு
கல்லறையாகவே காட்சியளிக்கிறது...

நிலா முற்றம் தீப்பிடித்ததோ என்னவோ?
இவனின் காதலிகள் தோன்றும்
உப்பரிகையில்,
சூரியக்காரன் தினம்
தோன்றுகிறான்...!!

உணர்வுகளில்தீப்பிடித்ததோ
என்னவோ ?
இவனின் இதயக்கைதி
இவனிடத்தில் உரிமை கேட்டு போராடுகிறான்...!!!

பெருமூளையில் தீப்பிடித்ததோ என்னவோ?
பேனாமனிதன் ,
இவனின்அனுமதியின்றி
உறங்க நினைத்தாலே உடைத்தேறிகிறான்..!!!
யார் இவன்?

மென்மையான் முகமூடியில்
வாழும் உணர்ச்சிமிகு
கவிஞன் நிலாச்செவிலி...

எழுதியவர் : கவிஞர் நிலாச்செவிலி (3-Jul-14, 6:44 pm)
பார்வை : 105

மேலே