ஆறாத வடுக்கள்

மன்னிப்பு இருப்பதால்
மரணங்கள்
மறுபடியும் தவறு செய்கின்றன

தூக்கு கயிறுகள்
குற்றங்களை
தூக்கிப் பார்க்குமானால்
தூக்குக்கே தூக்கு நடக்கும்.

இங்கு -
அனுசரித்துப்போன முட்டாள்
அறிவாளிகளுக்கு ஆணையிடுவான்
சிபாரிசு கடிதங்கள்
தேறாத கடிகாரங்களை ஓட வைக்கும் .

படைத்திட்ட பிரசாதத்தை
பகவான் உண்டுவிட்டால்
காக்கைகள் மட்டுமில்லை
பக்தனும் யோசிப்பான்
பசி மயக்கத்தில் ஆலயப் பிரவேசம்.

எழுதியவர் : சுசீந்திரன். (4-Jul-14, 8:41 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 94

மேலே