சிலிர்த்திடும் சிந்தையும்

சிங்காரி அவள் சிரித்திட்டால்
சிலிர்த்திடும் சிந்தையும் !
பூவரசி அவளும் புன்னகைத்தால்
புரவிகளும் சிலிர்த்தெழும் !
மயக்கிடும் அவள் அழகுதான்
மண்டியிடும் இயற்கையும் !
தீண்டிடும் தென்றலின் சுகமே
தீட்டிய காரிகையவள் !
வாசமிகு அவளின் கேசமும்
வம்பிழுக்கும் வாலிபர்களை !
வரிசையில் கோர்த்த முத்துக்கள்
வடிவழகியின் பற்களும் !
அலங்கார சிலைக்கு அழகூட்டும்
அணிந்திட்ட ஆபரணங்கள் !
மெருகேற்றிய மேனியாள் அவள்
மென்மையின் மேலாடை !
விழிமூடி சிரிக்கும் அழகினால்
வழிதேடும் வாலிபமும் !
வளைந்திடும் நாணல் அவளும்
வழிந்திடும் தேனமுதே !
பழனி குமார்