காதல் ஜெயித்தது 2
வருடாவருடம் பங்குனி மாதம் வரும் திருவிழா அந்த வருடமும் வந்தது. ஊரே விழாகோலம் பூண்டது. 15 நாள் அம்மன் திருவிழா ஆரம்பமானது. ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் புண்ணிய ஸ்தலங்களில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வந்து அம்மனை குளிர்விப்பார்கள். அந்த கிழமைகளில் இரவுகளில் பூவோடு எடுக்கப்படும். நாட்டுபுற நடனங்கள் ஆடப்படும். புலி வேடம் பூண்டு இளைஞர்கள் வருவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். 15 ஆம் நாள் அன்று பூமிதி திருவிழா நடைபெறும்.
அந்த வருடமும் திருவிழா சாட்டபட்டிருந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் உறவினர்கள் வந்திருந்தனர். ஊரே கலகலப்பாக இருந்தது. அன்பு வீட்டில் அவனும் அவனது அம்மா சந்திர இருவர் மட்டுமே. சந்தராவின் கணவன் இறந்த பிறகு அவளுக்கு அடிக்கலாம் தர யாரும் முன்வரவில்லை. கைகுழந்தையோடு நின்றவளை யாரும் அனுசரிக்கவில்லை. அதனால் அவளும் யாரையும் நினைப்பதில்லை.
சத்யாவின் வீடிற்கு அவளது இரண்டு தாய் மாமன்களின் வீடும் வந்திருந்தது. மூத்த மாமன் பேர் பழனிசாமி. அவருக்கு ஒரு மகன். பேர் வினோத். என்ஜினீரிங் படித்து வந்தான். இரண்டாவது மாமன் புருசோத்தமன் . அவருக்கும் ஒரே மகன். பேர் நிதிஷ். வினோத், நிதிஷ் இருவருக்குமே சத்யா மீது ஒரு கண்.
ஆனால் சத்யா யாரையுமே கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. வந்தவர்களை வாங்க என்று அழைத்துவிட்டு தன் அறைக்குக் புகுந்து கொண்டாள். எல்லோரும் சாமி ஊர்வலம் வருவதை பார்க்க சென்று விட்டனர். சத்யா ரெகார்ட் வொர்க் செய்து கொண்டிருந்தாள். வினோத் மெல்ல அவள் அறைக்குள் நுழைந்தான்.
என்ன வினோத் ? என்ன வேணும் உங்களுக்கு? அம்மா இல்லையா என்று கேட்டாள்.
யாரும் இல்லாத நேரம் அவன் உள்ளே வந்தது அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது.
அது வந்து சத்யா ,உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நீ சொல்ற பதில்ல தான் ஏன் பியுச்சரே இருக்கு ?
என்ன சொல்றிங்க ? என்று சத்யா கேட்க, எனக்கும் நிதிஷுகும் ஒரு போட்டி. யார் உன்னை மேரஜ் பண்ணிக்கபோரோங்கிறது தான் அது. அதுல நான் தான் ஜெயிக்கணும். நீ என்னை தான் கட்டிப்பேன்னு சொல்லணும். அதான் அத சொல்ல தான் வந்தேன் என்று சொல்லி முடித்தான்.
என்ன வினோத் இது. நீங்க போட்டி வெச்சிகிரதுக்கு நானா கிடைச்சேன். நான் படிக்கணும். நல்ல வேளைக்கு போகணும். நீங்க முதல்ல இங்கிருந்து போங்க. என்றாள் முகத்தில் கொஞ்சம் கோபத்தை வரவழைத்து கொண்டு.
இல்ல நீ என்னதான் கட்டிப்பேன்னு சொல்லு. அப்பதான் போவேன் என்று மிரட்டினான் . முடியாது என்றாள்.
இப்ப யாருமில்ல. நான் நினைச்சா இப்ப என்ன வேணுமின்னாலும் பண்ணலாம். அப்புறம் நீ என்ன தான் மேரேஜ் பண்ணியாகனும். என்ன சொல்ற இப்ப என்று தன் சுய ரூபத்தை காட்டினான்.
சத்யா மிரண்டாள். உன் பேச்செல்லாம் என்கிட்ட செல்லாது. மரியதைய வெளிய போடா என்றாள்.
என்னது என்னை போடானா சொல்றேன். இருடி உன்னை வெச்சிகிறேன், என்று அவள் கையை பற்றி இழுத்தான். அடுத்த கணம் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள்.
வலியில் நிலை தடுமாறிய அவன் அறைக்கு வெளியே சென்றான். அவள் கதவை தாளிட்டு விட்டு அழுதாள்.
அடுத்த நாள் திருவிழா . மாவிளக்கு எடுத்து கொண்டு பெண்கள், தோழிகள் புடை சூழ சத்யா கோயிலுக்கு சென்றாள்.
அவள் தரிசனத்துக்காக அன்பு அங்கு காத்திருந்தான் நண்பர்களோடு.
(தொடரும்)