மீண்டும் வானம்பாடி

..."" மீண்டும் வானம்பாடி ""...

கனவுகள் வந்தெனை கட்டி தழுவ
இரவுகள் நித்தம் வியர்த்து குளிக்க
உறக்கம் இழந்து தனிமை சிறையில்
தகித்து வெதும்பும் உள்ளத்து வலிகள்,,,

பிறப்பும் இறப்பும் வாழ்வில் ஒருமுறை
இருக்கும் காலங்கள் யாரும் அறியார்
வாழ்வை ரசிக்க வானமே எல்லையாய்
வானம்பாடியாய் மீண்டும் பறக்கலாம் வா ,,,

சுற்றி திரிந்த புல்லின் வெளிகள்
காய்ந்து கருகி மண்ணோடு மக்க
இயற்க்கை மறைந்த இயந்திர வாழ்வு
இனியும் வேண்டாம் உயிரோடு சாவு ,,,,

வசந்தகால தென்றல் வருடியே செல்லும்
வார்த்தையாவும் மெளன உடையே பூணும்
கரங்கள் சேர்த்து காற்றினை கிழித்தே
வானம்பாடியாய் மீண்டும் பறக்கலாம் வா ,,,

வானம் தேடும் பறவையாய் ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன் (7-Jul-14, 12:36 pm)
Tanglish : meendum vaanampaadi
பார்வை : 283

மேலே