அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர

நடை முறை ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் அரசின் புதிய பாட திட்டத்தையும், இலவச ஆங்கில அகராதியும் வழங்கி அரசு பள்ளிகளின் வழி வரும் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை அதிகரிக்க வேண்டும்: வீ.ஆர்.சதிஷ்குமரன்

நீதித்துறையில் ஆங்கிலம்,! வேலை வாய்ப்பை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஊக்குவிப்பு. அங்கே கட்டாயம் ஆங்கிலம்! சட்டை கசங்காத வேலை வேண்டுமா ஆங்கிலம் வேண்டும்? ஆங்கிலம் வேண்டாம் என்று குரல் கொடுப்பவர்களின் பிள்ளைகள் உறவினர்கள் படிப்பது ஆங்கில கல்வி! கல்லூரிகளில் வளாக நேர்காணலில் தேர்வு பெற ஆங்கிலம்? பல்லாயிரகணக்கான இளங்கலை படிப்பு முடிந்தும் மாணவர்களின் பட்டய வாய்ப்பு பெறாமல் இருப்பதற்கு ஆங்கிலத்தில் மட்டும் தேர்ச்சி பெறாமல் அவர்களுடைய பட்டய வாய்ப்பு வானில் பறக்கும் பட்டமே என்பதுதான்! அந்த பட்டம் வானிலிருந்து கீழே வரலாம் வராமலும் போகலாம் என்பது போல தான் அவர்களின் நிலை. கேள்விக்கே அர்த்தம் தெரியாது அதாவது மாணவர்கள் வினாத்தாளில் என்ன கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்ற அர்த்தமே தெரியாது பிறகு பதில் மட்டும் எப்படி எழுதுவது.(நடை முறை ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் அரசின் புதிய பாட திட்டம் வந்தால் ஒரு வேலை அந்த தொகுப்பை வைத்து படித்தவர்கள், மற்றும் படித்து முடித்தவர்கள் பயன்பெறலாம்)

நம் தமிழக அரசு அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், மிக குறைந்த செலவே ஆகக்கூடிய இலவச அல்லது தினம் ஒரு ருபாய் வசூலித்து ஆங்கில அகராதி வழங்க வேண்டும், நேரம் பார்க்கும் கடிகாரம் போல் அவ்வகராதியை பார்த்து சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து அவர்களுடைய ஆங்கிலதிறனை கல்வித்துறை வளர்க ஏற்பாடு செய்யவேண்டும்.
இன்டர்நெட்,ஈமெயில் என்று தனது அறிவை தானே கூர்மை படுத்திக்கொள்ள ஆங்கில அறிவு மிக மிக அவசியம் என்பதை யாருமே மறுக்க முடியாது, அவ்வாறு மறுப்பவர்கள் இந்த எழுத்து.காம் இணையத்தளம் கூட நிச்சயம் பயன்படுத்த முடியாது.பல்லாயிரக்கணக்கான இளங்கலை, முதுகலை,பட்டம் பெற்று குறைந்த சம்பளத்திற்கும்,வேலை இல்லாமலும் இருப்பதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளி வழி வந்து ஆங்கில அறிவு புலமை இல்லாததே என்பதை என்னால்,நம்மால் நிச்சயம் கூற முடியும். ஏனென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் ஊக்குவிப்பு,ஆங்கிலத்திற்கு வரவேற்பு,ஏழை மாணவர்கள் பரிதவிப்பு. ஒரு ஏழை மாணவன் வாழ்கையில் உயரிய நிலையை அடைந்தால், அவனால் பல குடும்பங்கள் நிச்சயம் வாழும், ஏனென்றால் வெற்றி பெறுவதற்கு அவன் சந்தித்த பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார தடை கற்களை ஏழை அரசு பள்ளி வழிவந்து உயரிய நிலையை அடையும் மாணவனால் மட்டுமே , தன்னால் முடிந்த உதவிகளை, உறவினர்களுக்கும், சமுதாயத்திற்கும் நிச்சயம் செய்து படி கற்களாக இருப்பான். மேலும் நான் இறுதியாக கூற வருவது என்னவெனில் அண்டை மாநிலம், அயல் நாடுகள், நம் அறிவை மேலும் மேலும் மற்றவர்களின் உதவியை நாடாமல் நாமே கூர்மை படுத்த இன்டர்நெட் பயன்படுத்தும் அளவிற்காகவாவது ஆங்கில அறிவு அவசியம், மேலும் அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளிலேயே படிக்க முயற்சி மேற்கொண்டு அவ்வாறு செய்யும் ஆசிரியர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். பெயரளவில் மட்டுமே ஆங்கிலத்தை மாணவர்களுக்கு கற்றுகொடுக்காமல் அவர்களுக்கு பயன்படும் வகையில் கற்பிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்...ஆங்கிலம் பேச்சாற்றல் இல்லாமல் இளங்கலை பட்டம் வேறு எந்த பட்டம் பெற்றவரும் பெரிதாக எந்த தனியார் நிறுவனத்திலும் அதிக சம்பளம் இதுவரை வாங்கியதாக தெரியவில்லை...

இந்த சூழ்நிலையை மாற்றி ஏழை மாணவர்களின் குடும்பங்களை வளம் உள்ளவர்களாகவும், வளர்ச்சி பாதையிலும் கொண்டு சென்று, இந்தியாவை வல்லரசாக்க அரசு பள்ளி வெளிவரும் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்

எழுதியவர் : வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லப (7-Jul-14, 9:12 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 123

மேலே