“அவள் அப்படித்தான்”
அவள் அப்படித்தான்
- தினெஷ் பழனி ராஜ்
நலிந்த கனபதி லாட்ஜய் பார்க்கும் எல்லோருக்கும் தெரியும் அங்க எதோ தப்பு நடக்குதுனு இருந்தாலும் யாரும் கேக்கல பாவம் அந்தாலு எதோ பொழப்பு நடத்திட்டு இருக்கான் அத எதுக்கு கெடுத்துக்கிட்டுனு பெருந்தன்மையா விட்டர்ராங்க அவரும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை நெத்தில பட்டைனு கம்பீரமா வரவேற்ப்பாளரா உக்காந்து காத்து வாங்கிட்டு இருப்பாரு............
“அண்ணே இந்தாங்க ரூம் சாவி” அறை என் 45ன் சாவியினை நீட்டுகிறாள் சரசு
“என்ன........ சரசு உன் காட்டுல மழைதான் போல” கனபதி லாட்ஜ் முதலாளி சரசுவின் பின்னால் தயங்கி தயங்கி வந்து அவளை கடந்து வெளியேரியவனை பார்த்து சிரித்துக்கொண்டே கேட்கிறார்
“என்னண்ணே பன்றது இப்படி எல்லாம் மழை பெய்ஞ்சாதான் நம்ம பொழப்பு ஒடுது” சலித்துகொண்டே சொல்லிவிட்டு லாட்ஜை விட்டு வெளியேருகிறாள் சரசு
இடதுபுற சாலையில் அவள் இடுப்பு மடிப்பு வெட்டியெரிய தேர் போல அசைந்து அசைந்து நடக்கிறாள்.கண் பறிக்கும் சிவப்பு நிற புடவை மார்புக்கு மத்தியில் ஒரு கோடாக மட்டும் வர அவள் அவள் வளைவு நெளிவு எல்லாம் அப்பட்டமாய் தெரிந்தால் யார்ப கண் தான் சரசுவின் மேல் இருக்காது.இவள் உதடுகளை பார்ப்பவன் உதடுகள் எல்லாம் துடித்து போகும் ஒருமுரையேனும் இவள் இதழ்களை ருசித்துவிட.அந்த சாலையில் நடக்கும் ஆண்களின் கண்களெல்லாம் இவள் மேல் மட்டும்தான் அவளும் அதனை எல்லாம் பார்த்தவாரே அசைகிறாள்..........
“சரசு.................” சப்தம் கேட்டு சுற்றும் முற்றும் தேடுகிறாள்
“ஏய் இங்க பாருடி” மரத்தடியில் நின்றுக்கொண்டு கையசைக்கிறாள் கிரிஜா
“என்னடி ராத்திரிலாம் ஆளையே காணோம் சீக்கிரமா சவாரி வந்துரிச்சா” சரசு கேட்க்க
“ஆமாண்டி பார்ட்டி புதுசு வேற வெச்சு கரந்துட்டேன்ல, அதுசரி உனக்கு எப்டி” கிரிஜா கேட்க்க
சரசு சலித்துக்கொண்டு “எங்கடி 12 மனி ஆச்சு அதும் இல்லாம சரியான பேக்கு வேற பேரம் பேசுராண்டி விடலயே உருவிட்டு விட்டுடேன்ல”
“சரி அப்படியே சத்திரம் பக்கம் போவோம்”
“ம்ம்ம்.......வா......” என்று சரசு நடக்க கிரிஜாவும் அவளோடு நடக்கிறாள்.
சாலையில் இருவரும் நடந்துகொண்டிருக்கும் வேலையில் சரசு சட்டென்று நிலை தடுமாறுகிறாள்,இரு கண்களையும் கசக்கி கசக்கி பார்க்கிறாள் மங்கலாக தெரிகிறது சட்டென்று வாயை பொத்திக்கொண்டு சாலை ஒரத்தில் வாந்தி எடுத்து புடவையில் வாய் துடைத்து நின்ற சரசுவை பார்த்து அதிர்ச்சியில் கிரிஜா “சரசு என்னாச்சுடி” கேட்ட கனமே
“நைட்டு இந்த முருகேசன் பய கடையில புரோட்டா சாப்பிட்டேன் பரதேசி பழச போட்டுட்டான் போல ஒத்துக்கலபோல” சொல்லிவிட்டு சரசு நடக்க துவங்க இடைமறித்து கிரிஜா
“ஏய் நில்லுடி............கைய குடு” நாடி பிடித்து பார்க்கிறாள்
“ஜாக்கரதையா இருக்க மாட்டியா சரசு” அதிர்ச்சி கலையாமல் கேட்க்கிறாள்
“நாமலே பாவ பட்ட பொழப்பு பொழைக்கிறோம் இதுல இது வேறயா” தொடர்ந்து புலம்ப சரசு “என்னடி....என்னாச்சு இப்பன்னு இப்டி பொழம்பித்தள்ளுர”
“வந்தவன்டலாம் கேட்டுட்டு தானே போன” தொடர்ந்து கேள்விகள் கிரிஜாவிடம் இருந்து
“ஆமாடி இப்ப என்னனு சொல்ல போறியா இல்லயா”
“சரசு அதுவந்து..................... நீ முழுகாம இருக்கடி” தயக்கத்தோடு சரசுவின் கரங்களை பற்றி சொல்ல சரசு அதிர்ந்து சாலையின் ஒரத்தில் அமர்ந்து விடுகிறாள்.அவள் இரு கண்களிளும் கண்ணீர் கசிகிறது
“சரசு............. கருவ களைச்சிருவோம்”
சட்டென்று முகம் சிவக்க கிரிஜாவை முறைக்கிறாள் சரசு
“என்னடி முறைக்கிற தேவை இல்லாத ஆசைய வளத்துக்காத அவ்ளோதான் நான் சொல்லுவேன்”
கலங்கிய கண்களோடு கிரிஜாவின் கரம் பற்றி “வேனாம்டி கிரிஜா எனக்குள்ள ஒரு உயிர் உருவாகிருக்கு அத கொல்றது பாவம்டி”
“யாருமே இல்லாம அனாதயா தானே இருக்கோம் இப்போ ஒரு சொந்தம் வரப்போகுது அத ஏண்டி....” சரசுவை இடைமறித்து கிரிஜா
“நம்மலாம் யாருனு தெரியும்ல நெனப்புல இருக்குல முட்டாள்தனமா பேசர
நம்ம அவமானம்லாம் நம்மலோட போகட்டும் சரசு”
சரசு யோசிக்க துவங்குகிறாள் அவள் மனதுகளில் அவள் கடந்த காலங்கள் விரிகிறது,வேசியின் மகளாய் பிறந்து வேசியாகவே தன் வாழ்வை தொடர்ந்து தன் படுக்கையினை பல ஆணுடன் பகிர்ந்து தெருத்தெருவாய் திரிந்ததெல்லாம் வந்து வந்து போக அவள் கண்கள் குளமாகிறது.
சட்டென்று கண்களை துடைத்துக்கொண்டு
“கிரிஜா..... நான் ஒரு முடிவெடுத்துட்டென், இனி என் வயிதுல வளர்ற் குழந்தைக்கக்க வாழ போரேண்டி என் அம்மா என்ன வளத்த மாதிரி இல்லாம என் புள்ளய நல்ல வழில சம்பாதிச்சு படிக்கவெச்சு பெரிய ஆளா ஆக்கனும் இனி இந்த தொழில் எனக்கு வேணாம் புதுசா ஒரு வாழ்கைய வாழனும் கிரிஜா ”
சரசு சொல்ல சொல்ல கிரிஜா வியந்து பார்க்கிறாள்
“சரசு உன்ன நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு.......நீ ஆசை பாட்டமாதிரி உன் வாழ்கைய வாழு....இங்க இருக்காத எங்கயாது போயிடு” சொல்லி முடிப்பதற்க்குள் இருவர் கண்ககளும் நீரை வார்கிறது தாரைதாரையாக. சர்சுவை அழைதுக்கொண்டு வேக வேகமாக நடக்கிறாள் கிரிஜா சரசுவின் குடுசைக்கு............
குடுசைக்குள் அலமாறியில் இருந்த நாங்கைந்து புடவைகளையும் சேமிப்பில் இருந்த பனத்தினயும் எடுத்து மஞ்சை பயினுள் தினித்துவிட்டு கண்ணாடியின் முன் சென்று நிற்க்கிறாள் ஆடைகளை சரி செய்கிறாள் கண்ணாடியை பார்க்கிறாள்.
இதுவரையில் அவள் வளைவு நெளிவுகளை தொட்டும் பார்த்திடாத அவள் புடவை இன்று அவள் வளைவு நெளிவுகளை முழுவதுமாக மறைத்திருந்தது.காந்தமாய் ஈர்க்கும் அவள் கண்களில் மை இல்லை,செக்க சிகப்பாய் சுண்டி இழுக்கும் அவள் இதழ்கள் சாயமற்று இளம் சிவப்பாய் பிரகாசித்தது அவள் நெற்றியை சிறு ஸ்ட்டிக்கர் பொட்டு ஆக்கிரமித்து இருந்தது.மொத்ததில் சரசு எளிமையானாள் ஆடம்பரமில்லாத பேரழகியானாள்,இதுவரையில் அவள் முகத்தில் தோன்றிடாத நிம்மதியினையும் அமைதியினயும் முதன்முதலாக சரசு உணர்கிறாள்
“செத்த இருடி நம்ம முனுசாமி அன்னங்கிட்ட சொல்லிட்டு வந்தறேன்” என்று சொல்லிவிட்டு நகர்கிறாள் சரசு.
கடிகாரம் ஒடுகிறது, நேரம் நகர்கிறது கிரிஜா சிந்திக்கிறாள் மனதிற்க்குள் “செத்த நாளில வரேன்னு போனவ இன்னும் காணோமே சரி போய் பாப்போம்”அவள் நினைத்து முடிப்பதுதான் தாமதம் கதவை முட்டி மோதிக்கொண்டு ஒருவன் மூச்சிரைக்க
“அக்கா...........நம்ம சரசு அக்காவ போலிஸ் இழுத்துகிட்டு போவுதுக்கா” சொல்லிமுடிப்பதற்க்குள் பதறி அடித்து ஒடுகிறாள் கிரிஜா மஞ்சைபயினையும் எடுத்துக்கொண்டு..............மூச்சிரைக்க ஒடியவள் காவல் நிலையத்தின் முன் நின்று கவனிக்கிறாள் ஸ்டேசன் வாசலில் கேமிரா மேன் கேமிராவினை பொருத்திக்கொண்டிருக்கிறார்,பத்திரிக்கை காரர்கள் பேட்டிகான ஆயத்தமாகுகிறார்கள்,மேசையின் அருகில் விலை மாதுக்களை வரிசயாக முகம் போர்த்திய நிலையில் நிற்க்க வைக்கபட்டிருக்கிறார்கள் அவர்களுல் சரசுவும் நிற்க்கிறாள்.சரசுவை கண்டதும் மனம் பதபதைத்து அவளை நோக்கி விரைகிறாள்
“ஏய்.................. யாரு நீ....என்ன வேனும் அங்க எதுக்கு போற” என்று இடைமறித்து மிரட்டுகறது ஏட்டய்யாவின் குரல்.
நேராக ஏட்டய்யவிடம் செல்கிறாள் கிரிஜா
“அய்யா சரசு.........”என சரசுவை கைகாட்டி தொடர்கிறாள்
“அவள விட்ருங்கய்யா பாவம்யா அவ”
எரிச்சலடைந்த ஏட்டு “பாவமா பன்றது கேடு கேட்ட தொழில் பாவமாம்ல பாவம், பேசம போரியா இல்ல உன்னயும் அதுங்கலோட நிப்பாட்டடுமா”
“அய்யா..........அவள விட்டுருங்கய்யா.......”அழகிறாள் கிரிஜா
“ந்தா.....ம்மா.........போறியா இல்ல இன்ஸ்பெக்டர கூப்புடவா.....”
சட்டென்று கிரிஜா ஏட்டய்யாவின் கையிர்குள் பணத்தினை தினிகிறாள்
“ஒருவாரமா சம்பாதிச்ச பணம்யா இத வெச்சுக்கிட்டு சரசுவ விட்ற்றுங்கயா......”
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பணத்தினை பாக்கெட்டுக்குள் மறைத்துக்கொள்கிறார் ஏட்டய்யா
“இன்ஸ்பெக்டர் கிட்ட பேசலாம் ஆனா........ பத்திரிக்கைகாரனுக வேற இருக்கானுக என்ன பன்றதுனும் புரியல உன்ன பாத்தாலும் பாவமா இருக்கு”
“ சரி ஒன்னு செய்யலாம், சரசுக்கு பதில் நீ நில்லு சும்மா கணக்கு காட்டதான் முடிஞ்சதும் அய்யாகிட்ட சொல்லி நானே உன்ன விடசொல்லிடறேன்”
கண்ணீரை துடைத்துக்கொண்டு கிரிஜா” சரசு கிட்ட ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்ய்யா”
“சரி சரி இன்ஸ்பெக்டர் கண்ணுகல படாம போய் பேசிட்டு சீக்கிரம் வந்து நின்னுக்க.........அந்த ஜீப்புக்கு பின்னால போ நான் சரச அனுப்புறேன்.” சொல்லிவிட்டு நகரந்தவர் சரசுவை அனுப்பிவைக்கிறார்
சரசுவை பார்த்த கிரிஜா அவளிடம் அவள் மஞ்ச பையினை கொடுத்துவிட்டு அவள் கைகளில் பணத்தினை தினிக்கிறாள்
சரசு “எதுக்குடி இதெல்லாம்”
“போற இடத்துல செலவுக்கு வெச்சுக்கோ வேலை கிடைக்கிறவர தேவைப்படும் தயவு செஞ்சு வேணாம்னு சொல்லி என்ன பிரிச்சுப்பாத்திராத சரசு”
பட்டென்று கிரிஜாவை கட்டி அனைத்துகொள்கிறாள்,கிரிஜாவும் கண்களை துடைத்துக்கொண்டு
“பாத்து பத்திரமா போ......அடிகடி போன் பன்னு,என்ன பத்தி கவலைபடாத”
“ நீ போ சரசு யாரும் பாக்கறதுக்குள்ள” சரசுவை அனுப்பிவிட்டு பெருமூச்சுவிட்டபடி அந்த வரிசையில் இனைகிறாள் சரசுவிற்க்கு பதிலாய். திரும்பி திரும்பி பார்துக்கொண்டு சரசு வெளியேறி பேருந்து நிலையதை சென்றுசேர்கிறாள்.
கோயம்புத்தூர் மார்க்கம்,பேருந்திர்க்காக காத்திருக்கிறாள் அவள் கைகளில் மஞ்சபை இருக்கிறது மனதுமுழுக்க எதிர்பார்ப்புகள் நிறைந்துகிடக்க பேருந்திர்க்காக காத்திருக்கிறாள்.அவளது இடதுபுறத்தில் டீ கடை ஒன்றும் அதன் மேசையில் அமர்ந்து இருவர் தேனீர் அருந்திக்கொண்டே செய்தித்தாள் வாசிக்கிறார்கள். ஒன்றிரண்டு நிமிடதில் பேருந்து அதன் தடத்தில் நிற்க்கிறது,சரசு மெல்ல அந்த பேருந்தினுல் சென்று சன்னலோர இருக்கையில் அமர்கிறாள்.அவ்வப்போது, அவள் கண்கள் கசிகிறது துடைத்து கொள்கிறாள்.தன் வயிற்றில் ஒர் உயிர் உயிர்த்திருப்பதை அவ்வப்போது தொட்டு உண்ர்கிறாள்.
சிறிது நேரத்தில் அந்த பேருந்து, பேருந்து நிலையதினை விட்டு வெளியேருகிறது சன்னலோரத்தில் அமர்ந்திருந்த சரசு நீல வானத்தினை உற்று பார்க்கிறாள், புதிய வாழ்க்கயை பற்றிய என்னங்களும், அவள் குழந்தையை பற்றிய கனவுகளும் அவள் கண்முன்னே விரிகிறது..............
தன் வயிற்று பசிக்காக விலை போகும் பெண்களை விபச்சாரி,வேசி இன்னும் என்னென்வோ சொல்லி அழைக்கும் உலகம் காம பசி தீர்க்கும் ஆண்களை எந்த பெயர் சொல்லியும் அழைப்பதில்லை, பெண்களை மட்டும் குறைகூரும் ஆண் ஆதிக்க ஆண்ளின் வார்தைகளிலும் சரசுவுடன் ஒரு இரவை படுக்கையில் கழித்தவனின் வார்த்தைளிலும் புதிதாக வாழ்கயை துவங்கி இருக்கும் சரசு என்றும்
“அவள் அப்படித்தான்”
தினெஷ் பழனி ராஜ்