சுனாமி
மனங்களும் பதறுகிறது
நீ எழுந்து வரும் நேரத்தில்...
ஊர்வலமாய்
வருகிறாய் ஊருக்குள்
ஆக்ரோஷ சப்தத்தோடு...
இயற்கைக்கு விரோதமான
அறிவியலின் கண்டுபிடிப்பால்
நீ பீறுகொண்டு எழுகிறாய்
கோபத்தோடு....
எறும்புகளாய் மனிதர்கள்
நீ எழுந்து நின்று பார்க்கும்
அவ்வேளையில்...
சு ழன்று அடித்து
னா (நா)சபடுத்தும்
மி ரட்டல் சூறாவளி நீ (சுனாமி)...