வினோதன் சகோதரன்
அது ஒரு அழகிய கிராமம், பார்க்கும் இடமெங்கும் வயல்கள் தோப்புகள் என பசுமைக்கு பஞ்சமே இல்லை, அங்குதான் வசித்து வந்தான் வினோதன். அவன் பக்கத்து வீட்டில் இருந்தவள்தான் பார்வதி பாப்பா. அவர்கள் இருவரையும் பார்க்கும் யாரும் பக்கத்து வீட்டு பிள்ளைகள் என்று சொல்லமாட்டார்கள். அப்படித்தான் பழகினார்கள் அவர்கள் இருவரும். பார்வதியால் விநோதனை விட்டு பிரிந்து இருக்கவே முடியாது, அண்ணா! அண்ணா! என்று அவனையே சுற்றி வருவாள். விநோதனும் அவளை எப்பொழுதும் அவளை கீழே இறக்கி விடவேமாட்டான். பார்ப்பவர் எல்லாம் அவர்களை அண்ணன் தங்கை என்றுதான் சொல்வார்கள். வினோதன் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்கு பட்டணம் செல்ல ஆயத்தமானான்.
அப்போது அங்கே ஒரு குரல் அண்ணா என்ன விட்டு போறியா? நானும் வரேன் என்னையும் கூட்டிட்டு போ, பார்வதி நின்றால் பக்கத்தில். அண்ணன் ஊருக்கு போயிட்டு சீக்கிரம் வந்துடுவேண்ட வரபோ உனக்கு நெறைய மிட்டாய் வாங்கிட்டு வரேன்னு சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு கிளம்பினான்.
பட்டணம் வந்தாச்சு, ஒருவழியா நல்ல கல்லூரில இடமும் கிடச்ருச்சு, படிப்பு ஒரு பக்கம் போக மத்த காரியங்காலும் ரொம்ப நல்லாவே போச்சு. இடை இடைல ஊருக்கு ஒன்னு ரெண்டு தடவ பேசுறது.
அப்பா ஒரு வழியா ஒரு வருஷம் முடிஞ்சாச்சு. பரீட்சைலாம் முடிச்சிட்டு ஊருக்கு வந்தான். வந்தவனை ஓடி வந்து கட்டிக்கொண்டால் பார்வதி அண்ணா என்று, அப்படியே அவளை தூக்கி சுற்றி எப்படிட இருக்க என்று கேட்டவனுக்கு எதோ மாற்றம் தெரிந்தது அவளிடம், ஆம் அவள் அழகு மேலும் மெருகேறியிருந்தது. அவன் அவளை அப்படி ஆரைந்துகொண்டிருக்கும்போதே அங்கிருந்து ஒரு சத்தம்,
அட அறிவுகெட்டவனே இறக்கிவிடுட அவள, அவ என்ன இன்னும் சின்ன கொழந்தைன்னு நெனச்சியா? அவ பெரிய மனுசி ஆகிட்டாடா என்றால். அப்படியாஎன்று அவளை பார்த்தான் வினோ. உடனே எங்கிருந்தோ வந்த வெட்கத்தில் தலை குனிந்துகொண்டே வீட்டிற்குள் ஓடி ஒளிந்துகொண்டாள் பாரு.
நாட்கள் மெல்ல நகர அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியது.
பார்வதி 10 ஆம் வகுப்பு படிப்பதால் அவளுக்கு சிறப்பு வகுப்புகள் முடித்து வீடு திரும்ப நேரம் ஆகும். அன்று வீட்டு வேலை கொஞ்சம் இருந்ததால் பார்வதியின் அம்மா விநோதனை பள்ளிக்கு சென்று பார்வதியை அழைத்துவரச் சொன்னார்கள்.
வனும் பள்ளிக்கு சென்று பார்வதியை அழைத்து வந்துகொண்டிருந்தான். வழி முழுவதும் மன்தொப்புகளும் தென்னந்தோப்புகளும் அமைந்திருந்தன. பார்வதியும் வினோவும் தோப்பு வழியாக நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது கால் தவறி பாரு சேற்றில் விழ ஆடை முழுவதும் சேராகிவிட்டது. அருகில் இருந்த நீர் தொட்டிக்கு சென்று பார்வதி சேற்றை கழுவிக் கொண்டிருந்த அவள்மீது திடீரென்று பாய்ந்தான் வினோதன்.
அண்ணா என்ன செய்யறீங்க என்று அவள் கேட்க்குமுன்னே அவள் ஆடைகளை கலைந்தது அவளை நாசம் செய்யத் தொடங்கினான் அவன்.
அண்ணா வேண்டாம் அண்ணா என்ன விட்ருங்க அண்ணா நா உங்க தங்கச்சி என்று எவ்வளவோ தடுத்தாள். பாவம் அவளால் முடியவில்லை, முடிவில் அவளை முழுவதுமாய் சீரழித்துவிட்டான் அந்த வினோதமான அண்ணன்.
அவள் உடல் முழுவதும் இரத்தத்துடன் எழுத்தால் சிதறிக்கிடந்த புத்தகங்களை பொருக்கி எடுத்தவள் திறந்து கிடந்த தமிழ் புத்தகத்தில் மட்டும் தனது அங்கத்தில் வழிந்த இரத்தத்தால் எதோ எழுதிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
வீடு திரும்பிய அவன் அவசர அவசரமாக ஊருக்கு கிளம்பினான், வீட்டை விட்டு கிளம்பும் முன் யாருக்கும் தெரியாமல் பார்வதியின் புத்தகத்தை எடுத்து வந்துவிட்டான். அவன் விடுதி அறைக்கு வந்து அமர்ந்த அடுத்த நொடி அவனுக்கு அழலை பேசியில் தகவல் வந்தது பார்வதி இறந்துவிட்டால் என்று.
அதிர்ந்துபோன அவனுக்கு அபொழுது அந்த புத்தகத்தின் ஞாபகம் வந்தது, ஒருவேளை நம்மைப் பற்றி எழுதி இருப்பாளோ?
தயக்கத்துடன் திறந்து பார்த்தான். அந்த புத்தகத்தில் உள்ள உறுதிமொழியில் இருந்த இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் என்ற ஒற்றை வரிமட்டும் அவள் இரத்தத்தால் அழிக்கப்பட்டிருந்தது ...!