உன் புருவங்களில் புதைந்துப் போனேன் - இராஜ்குமார்
தோல்வியின் முடிச்சை - என்
முயற்சி முட்டி மோதி
அவிழ்க்க முடியா
அவல நிலை - உன்
மூன்று நிமிட முறைப்பில்
உடனே உடைந்ததடி !!
என்
மணிக்கட்டின் மறுப்பக்கம்
வீழ்ந்த மழைத்துளி - உன்
பார்வைப் பட்டு
மரித்துப் போக
மறுக்குதடி ..!!
சுருங்கிப் போன உன்
சுடிதாரும்
நடனமில்லா நடையில்
அழகை கொஞ்சம்
அதிகம் கூட்டி - என்
இமையை ஏனோ இழுக்குதடி ..!!
உன்
நெற்றித் தொட்டு
வீழ்ந்து விட்ட
பொட்டினை - உடைந்த
ஓட்டில் ஒட்டி
வைக்க எண்ணமடி ..!!
என்
விழியில் வலியால்
வழியும் கண்ணீரின்
கடைசி சொட்டில்
மூழ்கி - உன்
முகம் காண ஏக்கமடி !!
நான்
விட்டு சொல்லும் காதலை
தொட்டு கொஞ்சம் பாரடி ..!!
நீ
கைதட்டும் காற்றின்
காற்றழுத்தம் அறியுமடி
என் காதலின் ஆழம் ..
பெண்ணே உனக்கு
புரிய வைக்க
புலமை தேடி .........
மீண்டும் உன்
புருவங்களில்
புதைந்துப் போனேன்
-- இராஜ்குமார்