காதலித்துப்பார்

காதலித்துப்பார்
உன்னை உனக்கே பிடிக்காமல் போகும்
உறவுகள் தூரமாய் தெரியும்
உண்மைகள் கண்டுபிடிக்க முடியாமல் போகும்
ஏமாற்றுவது தெரிந்தும் ஏமாறுவாய்
கவலைப்படுவாய் என்று தெரிந்தும்
நீ சந்தோசப்படுவாய்
வாழ்க்கை பிடிப்பின்றி போகும்
மரணதண்டனையா !!!
அது சாதாரணம் என்பாய் ............
புரியும் போது
தனிமையே பிடித்துப்போகும்
மற்றவர்களை நம்பமாட்டாய்
தன்கையே தனக்கு உதவி என்பாய்
வாழ்க்கை மரத்துப்போகும்
மொத்தத்தில் நீ
சந்நியாசி ஆவாய்
வாழ்க்கையை புரிந்திருப்பாய்
காதலித்துப்பார் !..............

எழுதியவர் : TP Thanesh (11-Jul-14, 3:07 pm)
Tanglish : kathalithuppar
பார்வை : 122

மேலே