காமராசர்

பெயருக்கு ஏத்த
வாழ்வை நீ வாழவில்லை
உன் பெயரை பலர் ஏற்க
நீ வாழ்ந்துவிட்டாய்..........!

கருப்பை தோலில் கொண்டாய்
பொறுப்பை தோளில் கொண்டாய்
இன்று உன் சிறப்பை
பல நூலில் கொண்டாய்.......!

பொற்காலம் உன்
ஆட்சி
உன் புகழ் அதன்
சாட்சி
உனை எண்ணிகூட உறுத்தாதோ இன்றைய தலைகளின் மனசாட்சி.........!

ஏழ்மைக்கும் நீ
தாழ்மைக்கும் நீ
வாழவைக்கவும் நீ உதாரணம்

கல்விக்கு கண் திறந்தவன்
வளர்ச்சிக்காய் இம்மண் பிறந்தவன்
என்றுமே நீ விண் சிறந்தவன்

நீ மீண்டும் பிற
என வேண்டும் சில
மனங்களும் உள

நீ மீண்டும் பிற
அழியும் சில
நடக்கும் பல
எங்களுக்கு கிடைக்கும்
நல்நிலை...........!

ஐயா நீங்கள் வாழ்க
உங்கள் புகழ் வாழ்க

எழுதியவர் : கவியரசன் (15-Jul-14, 8:09 pm)
பார்வை : 138

மேலே