வாலிக்கே மரணமா

மயக்கமா?கலக்கமா?மவுனமா?தியானமா?
மாகடல் அடங்குமா? வாலிக்கே மரணமா? (மயக்கமா)
அரங்க ராஜன் வரைய வந்தார் அமுதக் கவிகள் வரைந்து தந்தார் வரையும் திறனால் உயர்ந்து நின்றார் மாலி போல வாலி என்றார் (மயக்கமா
திருமண் அணிய வேண்டிய மனிதர் திருநீ றணிந்து வேண்டிய புனிதர் முத்தை யாவை கண்ணன் ஆண்டார் முத்தையன் தானே வாலியை ஆண்டார்(மயக்கமா)
(வி)சாவே இல்லை வெளியா சென்றார் ? விசாகம் என்று விண்ணா சென்றார் ? (மயக்கமா)
உனக்கும் கீழே உள்ளவர் கோடி உணர்ந்து வந்த வானம் பாடி உனக்குக் கீழே ஆறு கோடி உள்ளங்கள் பாடும் உன்னை நாடி(மயக்கமா)
ஏழை மனதை மாளிகை யாக்கி இரவும் பகலும் காவியம் பாடி வாழும் பாடல் நூறு நூறு வாலிப வாலி எங்கே தேடு...(மயக்கமா)

எழுதியவர் : சு.ஐயப்பன் (18-Jul-14, 9:50 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 79

மேலே