தடை தாண்டி வா

முயற்சி என்னும் ஏணி
அதில் தினமும் ஏறு நீ

ஒவ்வொரு படிக்கட்டை
தாண்டும்போதும்
வெற்றி விரைவில்
உன் கைக்கெட்டும்

எட்டாத கனி எதுவுமில்லை
எட்டு வைத்துவிட்டால்
வெற்றிக்கனி உன் கை சேரும்

தணலில் உருகாமல் பொன்
நகையாவதில்லை

உளியின் அடிபடாமல்
கல் சிலையாவதில்லை

தோல்வியின் வழிகண்டு
துவண்டுவிட்டால்
பின்வரும் வெற்றியின்
சுவை தெரியாதே !

தொடர்ந்து போராடு
தோல்வி உன்னிடம்
தோற்று போய்விடும் .

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (19-Jul-14, 10:06 am)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : thadai thaanti vaa
பார்வை : 79

மேலே