ஈர நினைவுகள் !
![](https://eluthu.com/images/loading.gif)
கடைசி நிமிடம் !
கண்களில் கனவு கலைந்து
நிஜத்தை உணர்ந்த அந்த நிமிடம் !
எனது என்று சொந்தம் பேசி
கட்டி தழுவிய உன்னை
அந்நியனாக விட்டு விலகிய நிமிடம் !
கண்களில் வலி !
கன்னத்தில் ஈரம் !
ஈரம் !
உனது இதழ்கள்
வரைந்த கோலம் அல்ல !
என் இதயம்
வரைந்த சுவடுகள் !
காலப்போக்கில் கரைந்துவிட்டது ஈரம்
காலம் கடந்தும் கரையாத கோலமாய்
உன் நினைவுகள் மட்டும்
இன்றும் என்னிடம் !