பருவ மழையோ, சூறாவளியோ
பருவ மழையோ ,சூறாவளியோ
----------------------------------------------
எங்கேயோ மழைப் பெய்யுது போல
இங்கேயோ மண் வாசனை, தூற்றல்
தூறலும் நின்னுபோச்சு எங்கும் புழுக்கம்
பின் வாடை அடிக்க பருவ மழை
தன் வரவுக்கு தப்பட்டை அடித்தாளோ?
நடுக் கடலில் சூறாவளி
ஓங்கி எழுந்து கரை நாடி வரும் பேரலைகள்
பெரும் புயலாலும் அடை மழையாலும்
துயரால் தவிக்கும் மக்கள்
அறுவடைப் பயிர்களெல்லாம் அழிவடைய
வாழும் குடிசைப் போயிற்று
ஆடு, மாடுகள் இல்லை
உண்ண உணவும் இல்லை, நீரும் இல்லை
கடல் கொண்ட சீற்றத்தால் தோணி போட்டு
மீன் பிடிக்க செல்லவும் இல்லை
வாழ வழி தெரியவில்லை
வானம் நோக்கி நிற்பதைத் தவிர
அந்த கதிரவன் வரவைத் தேடி
என்ன இது கொடுமை
நல்லவைப் பயக்கும் பருவ மழை
புயலாய் மாறி வெள்ளமாய் பெருகி
கடலும் சீற்றம் கொண்டால்
உழவரும், மீனவரும் எங்கு போவார்
என்ன செய்வார் -ஆக கொற்றவையே
சீற்றம் கொள்ளாதே ,எம்மீது
இறக்கம் கொண்டு எம்மையும்
இந்த மண்ணையும், கடலையும்
காப்பாய் அம்மா -எம்மை வாழா வைப்பையம்மா