சினிமா

சினிமா ஒரு பொழுது போக்கும் சாதனம்
அதை பார்ப்பவர்கள் எந்த நோக்கத்துடன்
பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது

பலர் உண்மையில் பொழுது போக்கு
என்றே நினைக்கிறார்கள்
,படத்தை பார்ப்போர் தங்கள் மனக் கவலைகளை
மறந்து மூன்று மணி நேரம் மகிழ்ச்சியாய்
இருக்கலாம் என்றே படம் பார்க்கிறார்கள்

சிலர் அதில் வரும் கேளிக்கை
நிகழ்சிகளை பார்த்து கொஞ்ச நேரம்
சந்தோசமாக இருக்கலாம் என்று
படத்தைப் பார்க்கிறார்கள்

இன்னும் சிலர் அதில் வரும் முக்கியமான
சண்டைக் கட்சிகளைப் பார்த்து
ரசிக்கலாம் என்று பார்க்கிறார்கள்

சிலர் அந்தப் படத்தில் வரும் பாடல்களை
பார்த்தும் கேட்டும் ரசித்திட
படங்களை பார்க்கிறார்கள்

இன்னும் சிலரே அதில் வருகின்ற
உணர்வுகளத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ள
காட்சிகளை பார்த்து மகிழ வருகிறார்கள்

இவற்றால் யாருக்கும் எந்த தீமையும் இல்லை
எந்த நன்மையும் இல்லை
வெறும் பொழுது போக்கு மட்டுமே

மொத்தத்தில் சினிமா வெறும் காட்சியே
ஒவ்வொருவரும் அதை பார்க்கும் விதத்திலும்
ஏற்றுக் கொள்ளும் விதத்திலுமே
குறைகளையும் நிறைகளையும் காண முடியும்

எழுதியவர் : பாத்திமா மலர் (23-Jul-14, 10:21 am)
Tanglish : sinimaa
பார்வை : 70

மேலே